Posts

Showing posts from May, 2017

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்

Image
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் ! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்   மு . நியாஸ் அகமது இ து ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம் .   ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார் . நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது . அதற்குக் கூறப்பட்ட காரணம் , “ நீங்கள் இந்திவழியில் கற்றவர் ” என்பதுதான் . அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார் , “ ஓ , அப்படியா ... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள் . அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன் . நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன் . பன்மைத்துவமான ஒரு தேசத்தில் , ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா ...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன் .” என்கிறார் . தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது ...