வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?
வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம் ? இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள் . ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு மனமிருந்தால் போதும் . வழியிருக்கு . சின்ன சின்ன செடி களை வைக்கலாம் . இதில் பெரியப்ளஸ் பாயின்ட் என்னவென்றால் இவற்றால் நமது வீடு குளுமையடையும் . வெயிலின் தாக்கும குறையும் . அப்படி எந்த மாதிரி செடிகள் வீட்டில் வளர்க்கலாம் என உங்களுக்கு ஐடியா வேண்டுமா ? இதைப் படிங்க !! கற்றாழை தாவரம் : இது உங்கள் அடுக்குமாடி குடியிருப்பை புத்துணர்ச்சி பொங்க வைத்துகொள்வதோடு , பல பயன்பாடுகளையும் கொண்டதாக இருக்கிறது . இது உட்புற வெப்ப நிலையை குளுகுளுவென வைப்பதோடு மட்டுமல்லாமல் , காற்றிலிருக்கும் தீங்குவிளைவிக்க கூடிய ஃபார்மால்டிஹைடையும் நீக்க வல்லதாகும் . அத்துடன் இந்த தாவரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் பல உடல் நலப் பயன்பாடுகள...