Posts

Showing posts from 2017

டெங்கு கொசு ஒழிப்பில் நடக்கும் பயங்கரங்கள்: சில அதிர்ச்சித் தகவல்கள்!

Image
டெங்கு கொசு ஒழிப்பில் நடக்கும் பயங்கரங்கள் : சில அதிர்ச்சித் தகவல்கள் ! டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு 26 பேர் பலியாகியுள்ளதாகவும் , 10 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது . ஆனால் எதிர்க்கட்சிகளோ , தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் லட்சக்கணக்கில் என்றும் , இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்றும் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன .     குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு . க . ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில் , ' இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு கூறுவதில் உண்மையில்லை . தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும் , இதுவரை 400- க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் எங்களுக்கு ஆதாரபூர்வமாகத் தகவல் வந்திருக்கிறது !' என தெரிவித்துள்ளார் . அதே சமயம் கடந்த ஆண்டு பக்கத்து மாநிலமான கேரளத்தில் டெங்கு காய்ச்ச...