உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில

 ஸ்டீவ் ஜாப்ஸ் 
கவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் பிப்ரவரி 24, 1955ல் பிறந்தவர். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நம் வாழ்க்கையை வளமாக்கும் அவரின் சில சிந்தனைகள் உங்களுக்காக...


ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்:
1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள்.
2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள்.
3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கப் போகும் போது நாம் இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் எனக்கு பெரிய விஷயமாகும்.
4. எனக்கு 17 வயதாக இருக்கும் போது சில வார்த்தைகள்  என்னை மிகவும் கவர்ந்தது. " உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து வாழ்ந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது "இன்று தான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எனக்கு நானே  சொல்லிக்கொண்டு என் வேலைகளை ஆரம்பிப்பேன்.
5. சில நேரங்களில் இந்த வாழ்க்கை உங்கள் தலையை செங்கல் கொண்டு அடித்து நொறுக்கும். எந்த நேரத்திலும்  நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.
6. வாழ்க்கை என்பது வரையறுக்கப்பட்டது. அன்பு மட்டுமே பல மைல்கள் கடந்து பயணிக்கும்.
7. பொருட்களை, செல்வங்களை தொலைத்து விட்டால் திரும்ப கண்டுபிடித்து விடலாம். ஒன்றே ஒன்றை மட்டும் தொலைத்து விட்டால் மீண்டும் அதை கண்டுபிடிக்கவே முடியாது அந்த ஒன்று தான் வாழ்க்கை.

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?