தூக்கமே வரமாட்டேங்குதா..? இந்த யோகாசனம் செஞ்சு பாருங்க!
தூக்கமே வரமாட்டேங்குதா ? இந்த 6 யோகாசனம் செஞ்சு பாருங்க ! உங்கள் உடல் சோர்வுற்று தலை தலையணையில் சாயும் அந்த இரவுப் பொழுதில் கூட உங்கள் மூளை மட்டும் சிந்தித்தால் எப்படி இருக்கும் ? வளர்ந்து வரும் உலகில் சில சத்தங்கள் மற்றும் இடையூறுகள் கூட அவர்களது தூக்கத்தை பரிக்கின்றன ( சத்தம் , வெளிச்சம் , டெக்னாலஜி : செல் போன் , லேப்டாப் ). எனவே தங்கள் தூக்கத்திற்காக அவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது . ஆனால் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதை எடுப்பதை நிறுத்தி விட்டாலும் இன்ஸோமினியா திரும்ப வரும் அபாயமும் இருக்கிறது . ஏனெனில் இந்த மாத்திரைகள் மேலோட்டமாக பிரச்சினையை சரி பண்ணுமே தவிர அதன் அடி வேரை பிடுங்க முடிவதில்லை . இப்படி தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது ...