பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 3

இவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள்! பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 3


பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக...
1. அறிமுகமில்லாத எந்த ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் `ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்பார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பலரும் காலை விட்ட பிறகே ஆழத்தைப் பார்க்கின்றனர், பின் அழ ஆரம்பிக்கின்றனர். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அவசரத் தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது; உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் உண்மை. பங்குச் சந்தையில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அறிவின்மையால், விழிப்பு உணர்வின்றி, பேராசையால் முழுப்பணத்தையும் இழந்து விழிபிதுங்கி நிற்காதீர்கள்
2. பங்குச் சந்தையில் யாருக்கு வருமானம் வருகிறோதோ இல்லையோ, புரோக்கிங் நிறுவனங்களுக்குப் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் புரோக்கரேஜ் கமிஷன் வந்துவிடுகிறது. குறிப்பாக பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் இன்ட்ராடே கால்ஸ் (Intraday Calls) என்று சொல்லப்படும் `அன்றே வாங்கி, அன்றே விற்பனை' செய்யும் வழிமுறையை வற்புறுத்துவார்கள். காரணம், நீங்கள் ஒரு பங்கை வாங்கி, 10 ஆண்டுகள் கழித்து அந்த பங்கை விற்பனை செய்தால் அவர்களுக்கு புரோக்கரேஜ் கமிஷனும் கிடைக்காது, எந்த ஒரு பலனும் இருக்காது. ஆகையால், அவர்களின் ஆசை வார்த்தையில் வீழ்ந்துவிடாதீர்கள், உங்கள் வருமானத்தை இழக்காதீர்கள். மாறாக, அவர்கள் வழங்கும் பங்கு பரிந்துரைகள் ஆராய்ந்து, அவை வெற்றியடைகிறதா என்பதை பல முறை பார்த்த பிறகு அதன் அடிப்படையில் முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது நல்லது

3. `எஃப் அண்ட் ' எனும் ப்யூச்சர் அண்ட் ஆப்சன் முன்பேர வர்த்தகத்தில் குறைந்த பணத்தை வைத்து அதிக பங்குகளை வாங்கி வணிகம் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, நிஃப்டி இப்போது 9,600 புள்ளிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிஃப்டி 9,800 கால் ஆப்சன் (Call Option) 10 ரூபாய், ஒரு lot size 10*50= ரூ.500 என்பதற்காக, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே பணத்தை வைத்துக்கொண்டு,  10 lot- 5,000 ரூபாய்க்கு வாங்காதீர்கள். இதைவிட, பல புரோக்கிங் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் 5,000 ரூபாய் மட்டுமே பணம் வைத்திருந்தால்கூட, அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கின்றனர். நிறுவனங்கள் அதிக பணத்தை வைத்து வணிகம் செய்ய வாய்ப்பளிக்கின்றார்களே என்பதற்காக, வர்த்தகம் செய்து உங்களுடைய முழுப் பணத்தையும் இழந்துவிடாதீர்கள். `அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு' என்பதை உணர்ந்து முதலீடு அல்லது வர்த்தகம் செய்யுங்கள்
4. பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் எதுவாக இருந்தாலும் சரியான நேரம் வரை வரை காத்திருந்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக எந்த ஒரு பங்கிலும் தேவையில்லாமல் வணிகம் செய்யாதீர்கள். பங்குச் சந்தை எங்கும் ஓடிப் போகாது; எதிர்காலத்தில் பல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரும். கிடைக்கும் அந்த நல்ல சந்தர்பந்தத்திற்காக காத்திருந்து அதன் பிறகு வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஏற்ற, இறக்கம் என்பது இருந்தாலும் பல நாள்களில் சந்தை மந்தமாகத்தான் இருக்கும். ஆனால், சந்தை அல்லது ஒரு பங்கின் விலை எந்தத் திசையில் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாத நேரத்தில் தேவையில்லாமல் வர்த்தகம் மேற்கொள்ளாதீர்கள், பணத்தை இழக்காதீர்கள்
5. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் பலரும் பணத்தை முதலீடு செய்கின்றனர், வணிகம் புரிகின்றனர். ஆகையால், பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபங்களை அவ்வப்போது பதிவு செய்வது என்பது மிக முக்கியம். பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறை வணிகம் மேற்கொள்ளும் போதும் லாபத்தைப் பதிவு செய்வதற்காக அவசரப்படாதீர்கள். நீங்கள் ஒரு வேளை அவசரப்பட்டால், அதிக வருமானத்தைக் கூட இழக்க நேரிடலாம். அதேசமயம், உங்கள் ஆர்டரை தவறாகப் போட்டு நஷ்டங்கள் கூட ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள். ஆகையால், அளவுக்கு அதிகமாக அவசரப்படாதீர்கள், அவதிப்படாதீர்கள்
6. பங்குச் சந்தையில் பலரும் பொதுவாக `வதந்தியை நம்பி ஒரு பங்கை வாங்கும் நிலையும், கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் ஒரு பங்கை விற்கும்' நிலைதான் நீடிக்கிறது. ஆனால், பங்குச் சந்தையில் செய்தி மற்றும் வதந்திகள் அடிப்படையில் எப்போதும் முதலீட்டு முடிவைத் தீர்மானிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில் மட்டுமே முதலீட்டைத் தொடருங்கள் அல்லது வெளியேறுங்கள்


Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!