பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 4

காகித வர்த்தகம் பழகுவது முக்கியம்..! ஏன், எதனால்? பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 4


பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. `பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ஏற்ற-இறக்கத்தை 80 சதவிகிதம் டெக்னிக்கல் அனாலிசிஸும், 20 சதவிகிதம் ஃபண்டமென்டல் அனாலிசிஸும் வைத்து நிர்ணயிக்கலாம்' என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இது எல்லா சூழ்நிலைகளிலும் உதவாது. கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஸ்திரத்தன்மை, தீவிரவாதிகள் தாக்குதல் என, பங்குச்சந்தையைப் பாதிக்கும் முக்கிய நிகழ்வுகள் சந்தைக்குப் பாதகமாகவே முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அவ்வளவாக உதவாது. ஆனால், அதேசமயம் எந்த ஒரு பங்கையும் அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், எந்த ஒரு தாக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காதுஉங்களுடைய முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவாருங்கள்
2. பங்குச்சந்தையில் உங்களுடைய பணத்தைப் போட்டு வணிகம் செய்வதற்கு முன், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முடிந்தவரை வீணாக்காமல் இருக்க `பேப்பர் டிரேடிங்' (Paper Trading or Mock Trading) எனச் சொல்லப்படும் காகித வர்த்தகம் செய்து பழகுங்கள். அதாவது, பணத்தை நேரடியாக பங்குச்சந்தையில் இறக்காமல், சந்தையை மட்டும் கவனித்து ஒரு பங்கை வாங்குவது, விற்பது என வெறுமனே பேப்பரில் செய்துபார்ப்பது. இதில் நிபுணத்துவம் கிடைத்த பிறகு வர்த்தகம் செய்வது நல்லது. நிஜத்தில் ஒன்றுமே இல்லாமல் குழந்தைகள் சோறு, குழம்பு, பொரியல் எனச் சமைப்பதுபோல நடிப்பார்களே, அதுபோல.

3. பங்குச்சந்தையில் மட்டுமல்ல, இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் வணிகத்தை மையமாக வைத்தே தங்களுடைய நிறுவனத்தை நடத்திவருகின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்காக அதிகம் பரிந்துரைப்பார்கள். ஆனால், கண்மூடித்தனமாக யாரோ ஒருவரின் பரிந்துரையை நம்பாதீர்கள். ஒருமுறைக்கு, பலமுறை அலசி ஆராய்ந்த பிறகு முதலீட்டு முடிவை நீங்களே தீர்மானியுங்கள்
4. பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகவும் அபாயகரமான மற்றும் ஆபத்தான விஷயம் எவை என்றால், `தினசரி வர்த்தகத்தில் ஷார்ட் அடிப்பது மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வணிகத்தில் ஈடுபடுவது'. இந்த இரண்டிலும் எந்த அளவுக்கு வருமானம் வருகிறதோ, அதே அளவுக்கு நஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் வணிகம் பற்றி உங்களுக்குப் புரியவில்லை அல்லது தெரியவில்லையெனில், தயவுசெய்து இதில் வர்த்தகம் மேற்கொள்ளாதீர். மாறாக, உங்களுக்குத் தெரிந்த நல்ல ஒருசில நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளுங்கள். வருமானத்தை உறுதியாக ஈட்டலாம்
5. களமிறங்கிய பிறகு எந்த ஒரு நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டாலும், தயங்காமல் பயப்படாமல் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வாருங்கள். ஆனால், எதிர்காலத்தில் அந்த நிறுவனம்குறித்து வரும் முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் முதலீட்டில் லாபம் அல்லது நஷ்டம் என எது வந்தாலும், கொஞ்சம் மதிப்பாய்வு செய்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள்
6. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல காரணிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், நிறுவனத்தின் செயல்திறன், விற்பனை, வருவாய், கடன், பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலகச் செய்திகள், இந்தியப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், பொருளாதாரக் கொள்கைகள், நிதி கொள்கை (Fiscal Policy), பணவியல் கொள்கை (Monetary Policy), சார்ட் பேட்டன்கள், பரபரப்பூட்டும் விஷயம், முதலீட்டாளர்களின் பயம் மற்றும் பேராசை என அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் ஓரளவுக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. ஆகையால், பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டவர்கள்,  என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு முதலீட்டை மேற்கொள்ளலாம்


Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?