ஐ.டி.உலகம் 11: ஊதிய உயர்வில் அநீதி!
ஐ.டி.உலகம் 11: ஊதிய உயர்வில் அநீதி! பெல் கர்வ் என்றதும் ஏதோ ஜியாமெட்ரி, ஸ்டேட்டிக்ஸ், கிராஃப் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதா. பெல் கர்வ் என்னும் இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துத் தான் ஊழியர்களின் ஊதிய உயர்வைப் பல ஐ.டி. நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. ஒருவர் 100 குதிரைகள் வைத்திருக்கிறார். அதில், 80 குதிரைகள் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. மீதமுள்ள 20 குதிரைகள் கொஞ்சம் நோஞ்சான் வகையறா. குதிரைகளின் உழைப்புக்கேற்ப உணவளிக்க வேண்டிய எஜமானனோ, 30 குதிரைக்குக் கொள்ளும், 50 குதிரைக்குப் புல்லும், 20 குதிரைக்கு இலை தழைகளையும் உண்ணக்கொடுத்தால், அதற்குப் பெயர்தான் பெல் கர்வ். இதே குழப்படிதான் ஐ.டி.யில் நடக்கிறது.தொழிலாளர்களிடையே போட்டியை வளர்த்து புரொடக்ஷனை அதிகப்படுத்துவதற்கான உத்தியாக அப்ரைசல் சிஸ்டம் உள்ளது என்று பல நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் அப்ரைசல் சிஸ்டம் என்பது உழைப்பைத் தந்திரமாக உறிஞ்சிக்கொண்டு, பெப்பே காட்டும் விஷயம் என்கிறார் ஐ.டி. ஊழியரான பரணி. அப்ரைசல் சிஸ்டத்தின் அநியாயங்களை அள்ளி வீசுகிறார் அவர். ஒரு புராஜெக்ட் என...