சில அறிஞர்களின் பொன்மொழிகள்..!!

சில அறிஞர்களின் பொன்மொழிகள்....
* ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது. - காவட்
* பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைபடுத்த வேண்டும் - பெர்நார்க்
* துணிவோடு செயல்படாத காரணத்தால் உலகில் பல திறமைகள் சிதறிப் போகின்றன. - சிட்னி ஸ்மித்
* மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை. - சாணக்கியன்
* பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்
* உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான். - ரோமின்
* தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. - பெர்னாட்சா
* ஆர்வம் இல்லாத இடத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை. - ராக்மென்
* இது மனதில் இருக்கட்டும். மனிதன் பயனின்றி அழியக்கூடாது. - காரல் மார்க்ஸ்
* தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடிவெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது. - ஓவிட்

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!