எதிர்கால கணவனுக்கு எழுதிய காதல் மடல்...!

எதிர்_கால_கணவனுக்கு_எழுதிய
காதல்_மடல்...

என் அன்பு கணவா...
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்... 
நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது...
இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்கு தெரியாது...
ஆனால்... என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்...
ஏனென்றால்... அதுதான் விதி , இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கிறான்...
நான் தான் உன் அன்பு மனைவி...
என் அன்பு கணவா...
நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல் செய்து கொண்டு இருக்கலாம்...
அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்...
பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்...
கவலை படாதே என் உயிரே...
அது என் பிராத்தனையாக கூட இருக்கலாம்...
இறைவனால் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது....
நான் உனக்காக பிறந்தவள்...
கவலைபடாதே... என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்...
உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்...
அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை...
உன் அழகும் வேண்டாம்...
உன் பணமும் வேண்டாம்...
நியாய, தர்மத்திற்கு கட்டுப்பட்ட நல்ல ஆணாக இருந்தால் போதும்...
கவலைப்படாதே... உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்...
உன் எதிர் காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்...
உன் அருகில் இப்பொழுது நான் இல்லை...
ஆனால்... என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்...
மரணம் என்ற ஒன்றை தவிர...
எங்கிருக்கிறாய்..??? உனக்காகவே என்னை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்...
நமக்கு 100 குழந்தைகள் பிறந்தாலும், உன் மேல் வைத்த காதல் குறையாது, ஏன் தெரியுமா நீ தான் என் முதல் குழந்தை..
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்...
நீயும் நானும் சந்திக்கும் அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதியிருக்கான்..??? காத்திருக்கிறேன்...
என் அன்பு கணவா...
கலங்காமல் நீயும் காத்திரு...
இப்படிக்கு... உன் எதிர் கால உன் உயிர் மனைவி... .

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!