மாபியா பிடியில் தமிழகம்..!
மாபியா பிடியில் தமிழகம்..! ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது . கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும் , தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன . நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன . இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா பொருத்தமானவரா என்றால் பொருத்தமானவரே . ஆண்களின் உலகமான சினிமா மற்றும் அரசியலில் , அனைத்து தரப்பினரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறி , வென்று காட்டியவர் . பராசக்தி திரைப்படத்தின் வசனத்தைப் போல “ நெருப்பாற்றில் நீந்தியவர் ” என்றால் அது மிகையில்லை . ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது தொடர்ந்த எதிர்ப்புகளாலேயே நடைபெற்றுள்ளது . தொடக்க காலத்தில் , எம்ஜிஆர் ப்ரூகளின் மருத்துவமனையிலிருந்த போது ஆர் . எம் . வீரப்பன் கோஷ்டியால் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார் . பின்னாளில் அவர் அரசியலை விட்டே ஒதுங்கலாம் என்று நினைத்தபோது , எம் . நடராஜன் வீட்டில் நடந்...