பயமும் தப்பு... தப்பா கத்துக்கவும் கூடாது!' அனிமேஷன் ப(பா)டம்
பயமும் தப்பு... தப்பா கத்துக்கவும் கூடாது!' அனிமேஷன் ப(பா)டம்
ஒரு விஷயம் எப்படி இருக்கும்னே தெரியாம பயந்துகிட்டே இருந்தா... அந்த விஷயம் என்னனு கத்துக்கவே முடியாது. எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு இலக்கு இருக்கும் அதை அடைய பயம்தான் முதல் எதிரி. அதே சமயம் பயப்படாம சில விஷயங்கள செய்யும் போது அதை தவறாவும் செஞ்சுடக்கூடாதுங்கிற விஷயத்த அழகா தனது புதிய ஷார்ட் ஃபிலிம் மூலம் சொல்லி இருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அனிமேஷன் நிறுவனமான பிக்ஸார்.
கடல் ஓரத்துல வாழுற சாண்ட் பைபெர் பறவைகள் கடல் அலை வரும்போது கரையை நோக்கி ஓடி வந்துடும் அலை திரும்ப போனவுடன் அங்கு உள்ள கடல் உணவுகளை உண்ணும். புதிதாக பிறந்து இருக்கும் பேபி சாண்ட் பைபெருக்கு இறை தேட கத்துக்கொடுக்கும் தாய் சாண்ட் பைபெர் தைரியம பேபியை கடலுக்கு அழைக்க, தண்ணீரில் நனைந்து மிரண்டு விடுகிறது பேபி சாண்ட் பைபெர்.
ஒருநாள் அதிக பசியோட கடல் அலைகளை பாத்துட்டு இருக்கும்போது. நத்தை அலைகள்ல இருந்து எப்படி பாதுகாத்துக்குதுணு வேடிக்கை பாக்குற பேபி சாண்ட் பைபெர் . தானும் அதே ட்ரிக்கை கையில் எடுக்குது. அப்பற என்ன பயம் போய் தண்ணில செம கெத்தா ஆட்டம் போடுது. அவ்வளவு நாளா அலைகளை பாத்து ஓடின அனைத்து சாண்ட் பைபெர்களுக்கும் இந்த பேபி சாண்ட் பைபெர் தான் ஹீரோவா தெரியுது.
ஆனா அதற்கு பிறகு ஒரு விஷயத்த தப்பா அணுகக் கூடாதுங்குற மெஸேஜோட ஷார்ட் பிலிம முடிச்சிருக்காங்க. எந்த ஒரு விஷயத்துக்கும் பயந்துகிட்டே இருக்கவும் கூடாது..தப்பாவும் கத்துக்க கூடாது! முயற்சியே பண்ணாம இருக்கக்கூடாதுங்கறதுக்கும் இது ஒரு நல்ல ப(பா)டம்...
வாழ்க்கைல எல்லா விஷயத்துக்கும் பயந்துகிட்டே இருந்தா ஜெயிக்க முடியாதுங்கிற விஷயத்தோட செம கெத்தா உங்க வாரத்த ஆரம்பிச்சா நீங்களும் ஹீரா தான் பாஸ்!
Shot film Link:https://www.youtube.com/watch?v=bOpExod4r2Y
Comments
Post a Comment