வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல..

வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல

                இயற்கையாக எல்லா மனிதர்களுக்கும் தான் சாதனையாளர்களாக வரவேண்டும் என விரும்புவதும்சாதிக்க வேண்டும் என்ற ஆவலும் பொதுவானதுசிலர் தங்களுடைய ஆவலைபூர்த்தி செய்ய முடிவதில்லைகாரணம்ஒன்றை சாதிக்க தேவையான கஷ்டங்களை அனுபவிக்க அவர்கள் விரும்புவது இல்லைசிலர் சாதித்து வெற்றி பெற காரணம் அவர்களிடமுள்ள கடுமையான உழைப்பும்சோதனைகளைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம்சில இழப்புகளை எதிர்கொள்கிற மன உறுதியும் இருப்பதால் தான் அவர்கள் சாதனையாளர்களாக ஆக முடிகிறது.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்குஎன வரையறுக்கிறது வள்ளுவம்.


பொதுவாக மனிதர்கள் ஒரு செயலை செய்யும் அணுகுமுறையைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறார்கள்ஒரு சிலர் ஒரு குறிக்கோளை நோக்கி வேகமாக துவங்கிஉற்சாகமாக ஆரம்பித்துஇடையிலே தொய்வு ஏற்பட்டுவேகம் குறைந்து வெற்றி வாய்ப்பை இழக்கிறார்கள்ஆனால் ஒரு சிலர்யோசித்து எண்ணி முடிவெடுத்தாலும் செயலைத் தொடங்கிய பின்பு அதே வேகத்தில் அதே ஈடுபாட்டுடன் குறையாத மன உறுதியுடன் தெளிவாக அடி மேல் அடி வைத்து வெற்றி பெறுகிறார்கள்குறுக்கு வழியிலே வெற்றி பெறுவது நிலையானதல்ல.

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?