ஜிஎஸ்டி வரியில் இருந்து சாமானிய மக்கள் பெறக்கூடிய 7 நண்மைகள்..!

ஜிஎஸ்டி வரியில் இருந்து சாமானிய மக்கள் பெறக்கூடிய 7 நண்மைகள்:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடந்த டிசம்பர் மாத குளிர்கால மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதை மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால் இதை இன்னமும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் போராடி வருகிறது. ஆனால் திங்கட்கிழமை துவங்கியுள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி விவதத்திற்கு ஒத்துக் கொண்டது. எனவே இந்த முறை எப்படியும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பயன் என்பதைப் பற்றியே நாம் பார்ப்போம்.

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? 
சரக்கு மற்றும் சேவை வரி என்றால் குழப்பமாக தான் இருக்கும். ஏற்கனவே இந்த சரக்கு வரி, சேவை வரி உள்ளதே இது என்ன இரண்டும் சேர்த்து ஒன்றாக என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதுவே சாமாணியர்களின் கேள்வியாகவும் உள்ளது. இப்போது ஒரு பொருளை தயாரித்து விற்கும் போது கலால் வரியும், சேவை வழங்கும் போது சேவை வரி பொதுவானதே. அதே பொருளை வேறு மாநிலத்திற்குச் விற்பனை செல்லும் போது நுழைவு வரி கட்ட வேண்டி வருகிறது. இது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் வரி செலுத்துவதை தவிர்த்து ஒரே வரியாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சேர்த்து வரியை கட்டுவது தான் ஜிஎஸ்டி.

விலை குறைய வாய்ப்பு பெரும்பாலான துரித நகர்வு நுகர்வு பொருட்கள் தயாரிக்கும் யூனிலிவர், கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் சேமிப்புக் கிடங்குகளில் சேமிப்பதற்கான செலவு, போக்குவரத்து செலவு எல்லம் குறையும். எனவே சோப்பு, டூத் பேஸ்ட் போன்ற பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

சிறிய ரக கார்கள்:

 சிறிய ரக கார்கள் மீதான வரி 24 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்களுக்கு வரி குறைந்தால் தான் வாடிக்கையாளர்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது
திரைப்பட டிக்கெட்கள்தி:
திரைப்பட டிக்கெட்களுக்கான கேளிக்கை வரி மிக அதிகமாக உள்ளது, ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருக்கும் போது மல்டிப்ளக்ஸ் போன்ற நிறுவனங்களும் விலையைக் குறைத்தல் டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது.
பெய்னிட் பொருட்கள்:
வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு இடையில் பெறும் போட்டி நிலவி வரும் நிலையில் வகைப்படுத்தப்படாத நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இரு வகையான நிறுவனங்களையும் ஜிஎஸ்டியில் சேர்ப்பதன் மூலம் பெரிய நிறுவனங்கள் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளது.   

இன்னும் பல பொருட்கள்:
மின்சாரக் கம்பிகள், மர பொருட்கள் போன்ற வீட்டுக் கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் வகுக்கப்படாத நிறுவனங்கள் வரி செலுத்தும் போது பெரிய போட்டி நிறுவனங்கள் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளது.

வேலை வாய்ப்பு உருவாக்கம்:
ஜிஎஸ்டி வரியினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேலை வாய்ப்பும் பெருகும்.

குறைவான ஊழல்:
பல வரிகளை ஒன்றாக ஜிஎஸ்டியில் இணைத்தால், வரி செலுத்துவோரை அதிகரித்து உழலைக் குறைக்கு முடியும். இதுவே ஜிஎஸ்டி வரியால் சாமானிய மக்கள் பெறக்கூடிய நண்மைகள் ஆகும்.

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?