வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!
வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!
"நமக்கு வாய்ல தாங்க சனி இருக்கு..! அதுவும் நாற்காலி போட்டு வசதியா ஊட்காந்து இருக்கு..!" - என்று புலம்பி தள்ளுபவர்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமேயில்லை. அலுவகங்களில் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் எதையெல்லாம் பேசலாம் - எதையெல்லாம் கூடாது, என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் கூடாது என்பதை பற்றிய தொகுப்பே இது. இதையெல்லாம் 'ஃபாலோ' பண்ணினா பில்கேட்ஸ், மார்க் சூக்கர்பெர்க் 'ரேன்சு'க்கு வர முடியாவிட்டாலும் கூட.. உங்கள் அலுவகத்தில் பெஸ்ட் ஆக திகழலாம் என்பது எங்கள் தாழ்வான கருத்து..!
01. வேலை : புதிய வேலை தேடுவதை பற்றி பேசக் கூடாது.
02. சம்பளம் : முக்கியமாக (அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி) உங்கள் சம்பளத்தை பற்றி பேசவே கூடாது..!
03. அந்தரங்க விடயங்கள் : உங்கள் அந்தரங்க விடயங்கள் மற்றும் இல்லற வாழ்க்கை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள கூடாது..!
04. இயல்பு : கிண்டல், கேலி செய்வது உங்கள் இயல்பாகவே இருந்தாலும் அதை தவிர்த்திடுங்கள் (முக்கியமாக ஜூனியர்களிடம்)..!
05. ஆர்வம் : பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டதீர்கள்..!
06. சமூக வலைதளம் : அதே சமயம் உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை சார்ந்த விடயங்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..!
07. போட்டி : உங்கள் போட்டியாளர்கள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்..!
08. புகை - மது : ":நான் புகைப்பிடிப்பேன், எனக்கு மது பழக்கம் உண்டு" என்ற விடயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள துளியும் முயல வேண்டாம்..!
09. வெறுப்பு : உங்கள் வேலை மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பதை வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள்..!
Comments
Post a Comment