இறப்பை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

இறப்பை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

    இறப்பு உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான். ஆனால், அது தானாக நிகழ வேண்டுமே தவிர நாமாக ஏற்படுத்திக் கொள்ள கூடாது. எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!
இந்த நிமிடம் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பசியின் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
 இன்றளவும் வரதட்சணை காரணமாக இந்தியாவில் பெண்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவர் இறந்துக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
     சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன அதை எல்லாம் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

            புதைக்கும் வழக்கம்:
இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கடந்த மூன்றரை லட்சம் வருடங்களாக மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மனித இறப்பு எண்ணிக்கை:
 இதுநாள் வரை மனித இனத்தில் ஏறத்தாழ நூறு பில்லியன் வரை இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாளில்:
 உங்கள் பிறந்தநாள் அன்று ஏறத்தாழ 1,53,000 பேர் உயிரிழக்கின்றனர்.
மருத்துவர் கையெழுத்து:
 மருத்துவரின் குழப்பான கையெழுத்தால் மட்டுமே வருடத்திற்கு 7,000 பேர் இறக்கின்றனர்.
கேட்கும் திறன் மனித திறனில் ஒருவர் இறக்கும் போது கடைசியாக அவர் இழக்கும் திறன் கேட்கும் திறன் தானாம்.

பிணங்கள்:
 மவுண்ட் எவரஸ்ட்-ல் 200க்கும் மேற்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்கள் இருக்கின்றன. இப்போது அவை உச்சியை எட்டுவதற்கான வழிகாட்டியாக திகழ்ந்து வருகின்றன.

நாற்பது நொடி:
 ஒவ்வொரு நாற்பது நொடியிலும் ஒரு நபர் உலகில் தற்கொலை செய்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெத்தை:
 அமெரிக்காவில் வருடத்திற்கு 600 பேர் மெத்தையில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறக்கிறார்கள்.,

ஏழ்மை:
 ஒவ்வொரு நாளும் இருபதாயிரம் குழந்தைகள் ஏழ்மை மற்றும் பசியின் காரணமாக உலகில் உயிரிழக்கின்றனர்.

வரதட்சணை:
 இந்தியாவில் இன்றளவும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறக்கிறார்.

தவறுகள்:
 வருடத்திற்கு நான்கு லட்சத்து நாற்பதாயிரம் பேர் மருத்துவர்களின் தவறுகளால் இறக்கிறார்கள்.

காற்று மாசுபாடு:
 உலகில் இறப்பவர்களில் எட்டில் ஒருவர் காற்று மாசுபாட்டின் காரணத்தால் இறக்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?